இந்தியாவின் சார்பில் காலிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை! – பவீனா பட்டேல்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் 8 தேதி முடிவடைந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த போட்டிகள் முடிந்ததும் ஊனமுற்றோருக்கான பாரலிம்பிக் போட்டிகள் நடை பெறுவது வழக்கம். கடந்த வருடம் கொரோனா நோய் தொற்று மற்றும் நோய் பரவலின் காரணமாக இந்த போட்டிகள் நடை பெறவில்லை.
எனவே தற்போது 16 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் 24 ஆம் தேதி முதல் ஆரம்பித்தது. அந்த விழா மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டியில் மட்டும் 162 நாடுகளைச் சேர்ந்த 4403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தங்க மகன் மாரியப்பன் ஒரு ஒரு தங்க பதக்கம் வாங்கிவிடுவார் என அனைவரும் ஆர்வமாக இருந்தோம்.
ஆனால் அவருக்கு ஏற்பட்ட சில அறிகுறிகளின் மூலம், அவருக்கு கொரோனா பரிசோதனை ஏற்பட்டது. தொற்று உறுதியாக வில்லை என்றாலும், அவர் தனிமை படுத்தப் பட்டார். மேலும் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் 4-வது நாளான இன்று டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சார்பில் அமர்ந்த நிலையில் பவீனா எதிரணியில் ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.