இந்தியன் 2 படத்தில் நடித்த சிறுவனின் பரிதாப நிலை! சம்பளம் மூன்றரை இலட்சம் கிடைக்குமா?

0
130
The plight of the boy who starred in Indian 2! Will you get three and a half lakhs?
The plight of the boy who starred in Indian 2! Will you get three and a half lakhs?

இந்தியன் 2 படத்தில் நடித்த சிறுவனின் பரிதாப நிலை! சம்பளம் மூன்றரை இலட்சம் கிடைக்குமா?

கொரோனா தாக்கத்தினால் பல பேர் தங்களின் பொருளாதாரத்தை இழந்து வருகின்றனர்.சிலரோ தனக்கு மிகவும் முக்கியமான தொலைக்க கூடாது என நினைக்கும் உறவுகளை இழந்து வாடி வருகின்றனர்.

மக்களின் நிலை கண்டு மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இருந்தாலும் நோய் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

அப்படி ஒரு சம்பவம் சென்னை ராயபுரத்திலும் நடந்தேறி உள்ளது.சராசரி குடும்பமாக வாழ்ந்து வந்த முபாரக் என்பவர் மருத்துவ ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

அவருக்கு யாஸ்மின் (34) வயதுடையவர், இவர்களுக்கு ஆலம் என்ற 10 வயது மகனும், ஒரு மகளும் இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவதாக யாஸ்மின் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

கொரோனா முதல் அலையிலேயே அவர்கள் நோய் வாய்ப்பட்டது குறிப்பிடத் தக்கது.இந்நிலையில் கடந்த வருடம் நடந்த ஒரு விபத்தில் முபாரக் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.

ஆலம், சங்கரின் தயாரிப்பில் உருவான இந்தியன் 2 ல் கமல்ஹாசனுக்கு பேரக்குழந்தையாகவும், வலிமை படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் நிலையிலும் ஆலம் மற்றும் அவரின் தாயார் கொரோனா நோய் தொற்றின் பிடியில் சிக்கி உள்ளனர்.ஆலம் அரசு மருத்துவமனையிலும், தாய் நிறைமாத கர்ப்பிணி என்பதனால், வீட்டில் இருந்தே மருத்துவரின் துணையுடன் தனிமைபடுத்தி கொண்டார்.

தனிமைபடுத்தி கொண்டாலும் நோயின் தீவிரம் அதிகரித்து வந்துள்ளது.நாளுக்கு நாள் அவருக்கு பாதிப்பு அதிகரித்து வந்துள்ள நிலையில் வேண்டிலேட்டர் உதவி தேவைப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து 9 இலட்சம் வரை செலவழித்து விட்டனர்.

இதற்கான பணத்தை ஆலம்முடன் வெப் சீரீஸில் நடித்த நவீன் என்பவர் சமூக வலைதளங்களின் உதவியால் சேகரித்து அவரின் மனைவியின் துணையுடன்  கொடுத்துள்ளார்.

இந்நிலையில் யாஸ்மினின் நுரையீரலில் அதிகளவு சேதத்தை தொற்று ஏற்படுத்தி உள்ளது.அதனால் அவரை காப்பாற்றுவது கடினம் என்ற நிலையில் சிசேரியன் சிகிச்சை மூலம் குழந்தையை காப்பாற்றினார்கள்.

குழந்தை பிறந்த சில வினாடிகளில் யாஸ்மினின் உயிர் பிரிந்தது.உடலை அடக்கம் செய்ய கூட வசதி இல்லாத சூழ்நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கின்றனர்.

இது எதுவும் தெரியாமல் அந்த சிறுவனோ அரசு மருத்துவமனையில் கோரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வருகிறான்.

இந்நிலையில் அந்த சிறுவன் நடித்த படங்களின் சம்பளங்கள் வந்தால் அந்த வீட்டிற்கு மிகவும் துணையாக இருக்கும் என உறவினர்கள் கூறுகின்றனர்.

Previous articleதளபதி 66 திரைப்படத்திற்காக உருவாகி வரும் மெகா கூட்டணி! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
Next article“கோமாளி” பட ஹீரோயினுக்கு கொரோனா! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!