பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! அமைச்சர் செய்த செயல்!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வசிப்பவர் முத்துராமன். அவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் மனைவி பிரேமா பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சிறிய குழந்தை சிறுமியான இசக்கியம்மாள்.
அருகிலிருந்த வீட்டில் விளையாடும் போது அங்கே இருந்த ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து சாப்பிட்டு விட்டாள். அதன் காரணமாக சில வாரங்களுக்குப் பின்னர் அவருக்கு வயிற்றில் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. குழந்தைக்கு சாதாரண வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டதாக நினைத்து நாட்டு வைத்தியம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.
ஆனாலும் அவருக்கு தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தபோது உணவுக்குழாய் மற்றும் குடல் பகுதியில் பிரச்சினை இருப்பதை கண்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமிக்கு பல்வேறு சோதனைகள் செய்து, பரிசோதித்த மருத்துவர்கள் விஷத்தன்மையுள்ள ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டதன், காரணமாக உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது.
அதை பார்த்து அதை அகற்றி அடைப்புகளை சரி செய்து மீண்டும் வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். ஆனாலும் அந்த குழந்தைக்கு உடல் நலம் தேறவே இல்லை. அந்த குழந்தையின் உணவு பாதை மிகவும் பாதிப்பு அடைந்து இருந்ததால், அந்த சிறுமியால் திட உணவு கூட சாப்பிட முடியாமல், வெறும் நீராகாரமாகவே சாப்பிட்டுள்ளார். அதன் காரணமாக எடை குறைந்து எலும்பும் தோலுமாக உடல் மெலிந்து காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து பல்வேறு கட்ட சிகிச்சைகள் பலன் அளிக்காததால் அதை பார்த்த அரசு மருத்துவர் ஒருவர் சிறப்பு ஏற்பாடு செய்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். தற்போது அமைச்சர் மா.சுப்ரமணியன் இந்த குழந்தைக்காக எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்க இடவசதி செய்து கொடுத்ததாகவும், அந்த குழந்தை உணவு எடுக்காத காரணத்தினால் வயிற்றில் உணவு செலுத்தக்கூடிய அளவு வயிற்றில் ஓட்டை போட்டு உணவு செலுத்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைக்கு 6 கிலோவில் வந்த குழந்தை தற்போது 2 கிலோ உடல் எடை கூடி உள்ளதாகவும் கூறியுள்ளார்.