தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு!

Photo of author

By Rupa

தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு!

Rupa

Updated on:

The police anarchy that continues to unfold! Strike among the public!

தொடர்ந்து அரங்கேறும் போலீசாரின் அராஜகம்! பொதுமக்களிடையே அடி தடி தகராறு!

சமீபகாலமா போலீசாரின் அராஜகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது.தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடியுடன் தொற்று அதிகமுள்ள முதலமைச்சர்கள் கலந்தோசித்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.அந்த ஊரடங்கு  கட்டுப்பாட்டில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் நடத்த அனுமதி தந்துள்ளனர்.அந்தவகையில் கோவையில் ஓர் ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேலாக உணவகம் நடத்தி வந்துள்ளனர். அங்கு சென்ற காவல் ஆய்வாளர் கடையை மூடம்படி பொறுமையாக கூறாமல்,

போலீஸ் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களை சரமாரியாக தாக்கினார்.அதன்பின் அக்கடையின் உரிமையாளரை பெண் என்றும் பாராமல் அவரது தலையிலேயே ரத்தம் வரும் அளவிற்கு லத்தியால் அடித்து துன்புறுத்தியுள்ளார்.அவரிடம் உள்ள அதிகாரத்தின் செயலால் அங்குள்ள சிசிடிவி கேமரா இருப்பதை கவணிக்கவில்லைப்போல,இவர் அக்கடையில் நடத்திய அராஜகங்கள் அனைத்தும் அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது.

அதற்கடுத்து அந்த கடை உரிமையாளர்கள் அக்காவலரின் மீது வழக்கு தொடுத்தனர்.வழக்கின் முடிவில் அந்த உதவி ஆய்வாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடை மாற்றம் செய்தனர்.ஆனால் இவர் செய்த இந்த தவறுக்கு இந்த தண்டனை மிகவும் குறைவானதே அதனால் இந்த உதவி காவலரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என கடை உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.அதன்பின் தமிழக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.இத்தாக்குதல் தொடர்பாக 2வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கோவை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்றவருடம் இதே போன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போட்டப்போது சாத்தான்குளத்தில் கடையை சரியான நேரத்தில் மூடவில்லை என காவல் நிலையத்திற்கு அப்பா மற்றும் மகனை அழைத்து சென்று அடித்தே கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.