கண்டிக்க வேண்டிய பொறுப்பிலுள்ள காவல் அதிகாரியே 13வயது சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த அவலம்…மாநில காவல்துறை மன்னிப்பு?

0
151

ஒடிசாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கண்காட்சிக்கு 13 வயது சிறுமி வந்துள்ளார்.ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த அந்த சிறுமியை,வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரி ஒருவர் அந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்த சிறுமியை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகும் அடிக்கடி காவல் நிலையத்திற்கு வரவழைத்து இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று போலீசார், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இதில் கர்ப்பமான சிறுமிக்கு, பிர்மித்ராபூர் ஆரம்ப சுகாதார மையத்தில், 15ம் தேதி கருக்கலைப்பும் நடந்துள்ளது.

இந்த துயர சம்பவம் குறித்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியை அழைத்து வந்த வளர்ப்பு தந்தை,பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார்,கருக்கலைப்பு செய்த மருத்துவர் ஆகியோரின் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று முன்தினம், குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு, நேற்று விசாரணை தொடங்கியது. இந்நிலையில், வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக சிறுமியை அழைத்து வந்த இன்ஸ்பெக்டரை, ‘டிஸ்மிஸ்’ செய்து,ஒடிசா மாநில டிஜிபி அபய் நேற்று உத்தரவிட்டார்.

மேலும் அபய் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கை வெட்கக்கேடானது. அவரது செயலுக்குமாநில காவல் துறை சார்பில் சிறுமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபடும் ஒரு சில போலீசாரால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் தலைகுனிய வேண்டிய நிலை உள்ளது.

Previous articleதமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்
Next articleமசூதியில் மறைந்திருந்து தீவிரவாதிகள் தாக்குதல்! காரில் சென்ற முதியவர் உயிரிழப்பு!