ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் செயலாளர் இணைச் செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர்வழக்கு பதிவு!

Photo of author

By Savitha

ஆர் எஸ் எஸ் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் சுகுமார்,செயலாளர் முருகன், இணைச் செயலாளர் குமார் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் செயல்பட்டதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பேரணியின் போது லத்தி போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்ற உத்தரவில் சொல்லப்பட்டுள்ள நிலையில், கையில் தடிகளுடன் பயிற்சி மேற்கொண்டதாலும், பொது கூட்டத்தில் சிலம்பு குச்சிகளுடன் கலந்து கொண்டதாலும் போலீசார் நடவடிக்கை.