DMK TVK: திமுகவின் முப்பெரும் விழா அடுத்ததாக கரூர் மாவட்டத்தில் நடைபெற போவதாக திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் சென்னை மதுரை கோவை உள்ளிட்ட பெரும் நகரங்களில் மட்டுமே முப்பெரும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை திமுகவின் பலத்தை காட்டவே விஜய்க்கு எதிராக இந்த மாநாட்டை நடத்துகின்றனர். மேற்கொண்டு இதில் பெரியார் மற்றும் அண்ணா விருது உள்ளிட்டகைகளும் வழங்கப்பட இருக்கிறது.
முன்னதாகவே கொங்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி இருக்கையில் இதன் அனைத்து கட்ட வேலையும் அவரது கவனத்திற்கு தான் வரும். அந்த வகையில் நேற்று சென்னை வந்தடைந்து விட்டார். இன்று இடம் குறித்த தேர்வு கிட்டத்தட்ட விஜய் மாநாட்டில் இரண்டரை லட்சம் பேர் கலந்து கொண்டதை அடுத்து இங்கு குறைந்தபட்சம் 4 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறதாம்.
பணம் மோசடி வழக்கு, பதவியின்மை உள்ளிட்ட அனைத்தும் செந்தில் பாலாஜியை நெருக்கடிக்கு தள்ளிய நிலையில் அதன் வெளிப்பாட்டை இந்த முப்பெரும் விழாவில் காண்பிக்கலாம் என கூறுகின்றனர். முக்கிய டார்கெட்டாக இருப்பது விஜய் தானாம், அதனால் அவருக்கு எதிரான மாநாடாகத்தான் இது நடைபெறப்போகிறது என்று அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றனர். விஜய்யின் பேச்சுக்கு இந்த மாநாட்டில் பதிலடி கொடுக்க காத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.