PMK: பாமக இளையர் அணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டு விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவின் புத்தாண்டு பொதுக்குழு கூட்டமானது கடந்த சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுவது குறித்து ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கிடையே வார்த்தை போர் முற்றியது. அதன் உச்சகட்டமாக ராமதாஸ் ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை பேரை நியமிப்பீர்கள் என்று பொங்கி எழுந்தார். இறுதியில் தனக்கென்று பனையூரில் புதிய அலுவலகம் திறந்து உள்ளதாகவும் என்னை அங்கு வந்து சந்தித்து தொடர்பு கொள்ளுங்கள் என கூறிவிட்டு கோபமாக பொதுக்குழுவிலிருந்து வெளியேறினார்.
இதனிடையே ராமதாஸ் அவர்களும் எனது பேச்சைக் கேட்பவர்களுக்கு தான் கட்சியில் உரிமை, இது நான் பார்த்து வளர்த்த கட்சி இன்று பேசினார். இவ்வாறு இவர்களின் வார்த்தை போரானது தொண்டர்களிடையே சஞ்சனத்தை உண்டாக்கியது. இதற்கு மறுநாளே இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸ் அவர்களை சந்திக்க அன்புமணி தைலாபுர தோட்டத்திற்கு சென்றார். இருவரும் சமரசமான நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ், இது உட்கட்சி பிரச்சனை அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
இது தவிர்த்து வேறு யாரும் பேச தேவையில்லை எனக் கூறினார். இவரைப் போலவே ராமதாசும் பதில் அளித்ததோடு, மேற்கொண்டு பாமக இளைஞர் அணி தலைவராதா முகுந்தன் நியமனம் செய்யப்பட்டு விட்டார். இது குறித்த கடிதத்தை அவரிடம் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார். ராமதாஸ் அவர்களுக்கு பிடிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவால் நாளடைவில் கட்சி ரீதியான பிரச்சனை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.