எனக்கும் விஜய்க்கும் து முதல்வர் பதவி.. அதிமுக கொடுத்த ஆப்பர்!! உண்மையை போட்டுடைத்த சீமான்!!

0
5
The post of chief minister for me and Vijay.. The offer given by AIADMK!! Seaman who found the truth!!
The post of chief minister for me and Vijay.. The offer given by AIADMK!! Seaman who found the truth!!

NTK: நாம் தமிழர் கட்சி சீமான் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அதிமுக, விஜய்க்கும் எனக்கும் என்னெல்லாம் சலுகை கொடுத்தது என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, முதலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைத்தால் 90 தொகுதிகளில் துணை முதல் பதவியும் தருவதாக தெரிவித்தது. அதேதான் எனக்கும் இதற்கு முன் சலுகை கொடுத்தது. இதனையெல்லாம் ஆடிட்டர் குருமூர்த்தி தான் என்னிடம் கூறினார்.

ஒரு சிலர் துணை முதல் பதவி தராததால் கூட்டணி அமைக்கவில்லை என கூறுகின்றனர். ஆனால் அது அப்படி கிடையாது. இரு கட்சிகளிடையே ஒத்து வராமல் இருந்திருக்கலாம். தேர்தல் கால கூட்டணி ஆட்சிக்கான கூட்டணியும் வேறு என்று நான் எப்போதும் சொல்லவில்லை. 2006ம் ஆண்டு போல எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத போது நாம் தமிழர் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும். நாங்கள் ஆட்சி மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம், ஆள் மாற்றத்தை ஏற்பவர்கள் அல்ல.

அப்படியே மாற்ற வேண்டும் என்று நினைத்தால் கட்டிடத்திற்கு வர்ணம் பூசாமல் அதை இடித்துவிட்டு புதிதாக கட்டுவேன். முதன் முதலாக இந்தியை திணித்தது காங்கிரஸ்தான். அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எப்படி தன்னாட்சி பற்றி பேச முடிகிறது?? இவர்கள் ஆட்சியில் இருந்தபோது மாநில உரிமையை பறித்ததுண்டு. முதல்வர் ஸ்டாலின் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு உள்ளது எனக் கூறினார்.

அது மிகவும் தவறு. அனைத்து வரியும் கொடுத்துவிட்டு தற்போது வரை மாநிலத்தில் கிடைக்க வேண்டிய கல்வி நிதி பேரிடர் நிதி எதுவும் கிடைக்கவில்லை. அதை எப்படி அவுட் ஆப் கண்ட்ரோல் என கூற முடியும். அண்டர் வே கண்ட்ரோல் எனக்கு கூறுவது தான் சரி இவ்வாறு ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Previous articleஅதிமுக பாஜக கூட்டணி ஆட்சி.. இரட்டை இலை மேல் தான் தாமரை!! நயினார் பேச்சால் பரபரப்பு!!
Next articleபாஜக கூட்டணி வேண்டவே வேண்டாம்.. அடம் பிடிக்கும் திருமா!! எடப்பாடிக்கு கொடுத்த அட்வைஸ்!!