முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்!  அதிகரிக்கும் கொரோனா தொற்று!

0
191
Corona infection confirmed to PM! Party leadership in shock!
Corona infection confirmed to PM! Party leadership in shock!

முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்!  அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெருமளவு பாதிப்பை உண்டாக்கியது. அமெரிக்கா பிரான்ஸ் இந்தியா என அனைத்து நாடுகளும் பெருமளவு பாதிப்பை சந்தித்தது. முதல் அலையோடு முடியாமல் இரண்டாம் அலை மூன்றாம் அலை என்று தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கொரோனா தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.

தற்போது நமது இந்தியாவில் நான்காவது அலை கணிசமாக அதிகரித்து வருகிறது.ஆனால் தற்போது வரை வட கொரியா நாட்டில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. உலக நாடுகள் மத்தியில் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியபோதே இதர நாடுகளில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டனர். அவ்வாறு இருந்தும் தற்போது வட கொரியா நாட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் கிம் ஊரடங்கு அமல் படுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி இப்போது கட்டுப்பாடுகளையும் போட்டுள்ளார். அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்து கொண்ட போதும் கூட வட கொரியா அதனை தவிர்த்து வந்தது.தற்பொழுது ஒருவருக்கு தொற்று  ஏற்படவே கூடிய விரைவிலேயே தொற்று இல்லாத நாடாக மாற்றுவோம் என்று அந்நாட்டு அதிபர் உறுதியளித்துள்ளார். ஜனவரி 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது நடப்பு ஆண்டு வரை வட கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.அதுமட்டுமின்றி புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் மேற்கொண்டு ஆலோசனை நடத்தியும் வருகிறார்.

Previous articleசாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கையெடுத்த அரசு மருத்துவர்கள்! சேலத்தில் அரங்கேறும் கூட்டம்!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஒரே குஷிதான்!