உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!!

0
221

உட்கட்சி நிர்வாகிகள் போட்ட பிரஷர்.. “இதற்கு மேல் என்னிடம் சக்தி இல்லை”- பதவியை திடீர் ராஜினாமா செய்த இளம் பெண் கவுன்சிலர்!!

பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ள நிலையில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மட்டும் 32 பகுதிகளை திமுக இடம் பிடித்தது. குறிப்பாக இளம் வயதில் சேர்ந்த நர்மதா என்பவர் பொள்ளாச்சி நகராட்சியின் ஏழாவது கவுன்சிலராக வெற்றி வாகை சூடினார்.

தற்பொழுது பதவி வகித்து 10 மாதங்கள் ஆன நிலையில் பதிவிட்டு ராஜினாமா செய்து கொள்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.

இவ்வாறு இவர் பதவி விலகுவதற்கு திமுகவில் இருக்கும் உட்கட்சி நிர்வாகிகள்தான் காரணம் என்று பலரும் பேசி வரும் நிலையில் இவரும் அதற்கு ஏற்றவாறு பேட்டி அளித்துள்ளார்.

அந்த வகையில் திமுக நகராட்சி தலைவராக ஆக இவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக நகர செயலாளர் மனைவி சியாமளா தேர்வு செய்யப்பட்டார்.

இவ்வாறு உட்கட்சி பூசலால் நர்மதாவிற்கு அதிருப்தி ஏற்பட்டிருந்த நிலையில் இவர் தொகுதிக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை கிடைக்காமலும் நகராட்சி தலைவர் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பலமுறை நர்மதா புகார் அளித்தும் யாரும் கண்டு கொள்ளாததால் இவ்வாறு இவர் ராஜினாமா செய்ததாக தொகுதியை சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் தான் பதிவை விட்டு விலகுவது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது,

இது எனக்கான களம் அல்ல நான் சுதந்திரமாக செயல்பட இதற்கும் மேல் வேறொரு களம் உள்ளது. அங்கு எனது செயல்பாடுகளை காட்ட விரும்புகிறேன். நான் என் சொந்த காரணங்களாலேயே தற்பொழுது விலகுகிறேன். அதேபோல வந்து விட்டு சென்று விட்டால் என்று சொல்லும் அளவிற்கு இல்லாமல் எனது சொந்த பணத்தை செலவழித்து மக்களுக்கு கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வைத்துள்ளேன்.

இதற்கு மேல் செய்வதற்கு என்னிடம் சக்தி இல்லை அதனால் வேறொரு களத்தில் இருந்து மக்களுக்கு தேவையானதை செய்ய விரும்புகிறேன்.

கட்சி தலைமையானது சிறப்பாக செயல்பட்டாலும் அதற்கு கீழ் உள்ளவர்கள் அவர்களது வேலையை செய்யவிடாமல் உள்ளனர். இது அனைத்தையும் கட்சி தலைமை பார்த்துக்கொண்டு தான் உள்ளது. இதனை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் சரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இங்கு நடக்கும் அரசியல் செயல்பாடுகளுடன் என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. அந்த வகையில் இதனை விட வேறொரு இடத்தில் மக்களுக்கு தேவையானதை நான் செய்ய விரும்புகிறேன்.

மேலும் நான் கட்சியை விட்டு விலகுவது குறித்து பல விமர்சனங்கள் கூறிவரும் நிலையில் பாஜகவில் இணை போவதாக கூறுகின்றனர். அதனை முற்றிலும் நான் நிராகரிக்கிறேன் நான் ஒரு பெரியார் ரெஸ்ட் அந்த வகையில் நான் எப்பொழுதும் வலதுசாரி பக்கம் சேரமாட்டேன்.

நான் மீண்டும் யுபிஎஸ்சி தேர்வுக்கு முயற்சிப்பதாக உள்ளேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார். கட்சி தலைமை சரியாக செயல்பட்டாலும் அதற்கு கீழ் உள்ளவர்கள் அவர்களது வேலையை செய்யவிடாமல் கீழ்மட்ட வேலையாக செய்வதை சுட்டிக்காட்டி இவர் பேசியுள்ளதார் கட்டாயம் உட்கட்சி பூசலால்தான் நர்மதா பதவி விலகக் கூடும் என்று கூறி வருகின்றனர்

Previous articleதிமுக வுடன் மநீம கூட்டணியை உறுதிப்படுத்திய நடைப்பயணம்!! ராகுல் காந்தியுடன் களத்தில் இறங்கிய கமல்!!
Next article231 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்! வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!!