ஆவின் பாலின் விலை மீண்டும் உயர்வு… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!!

Photo of author

By Sakthi

ஆவின் பாலின் விலை மீண்டும் உயர்வு… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…

 

ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

ஆவின் நிறுவனம் பச்சை, நீலம், சிவப்பு, பிங்க் போன்ற நிறங்களில் பால்பாக்கெட்டுகளை விநியேகம் செய்து வருகின்றது. இதில் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை தற்பொழுது மீண்டும் உயர்ந்துள்ளது.

 

5 லிட்டர் அளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட்டின் விலையை தற்பொழுது ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ளது. அதாவது லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் 5 லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 220 ரூபாயாக தற்பொழுது ஆவின் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயிரின் விலை லிட்டருக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் 120 கிராம் அளவு கொண்ட தயிர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அது 120 கிராமில் இருந்து 100 கிராமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அது மட்டுமில்லாமல் பிங்க் நிறம் கொண்ட டயட் பாலிலும் சிறய மாற்றத்தை ஆவின் நிறுவனம் கொண்டுவரவுள்ளது. அதாவது பிங்க் நிறத்தில் இருக்கும் டயட் பாலின் பாக்கெட் நிறத்தை மஞ்சள் நிறத்தில் மாற்றுவதற்கு ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.