பட்டென சரிந்த தங்கம் விலை.. இது தான் கடைசி!! நிபுணர்கள் போடும் அடுத்த குண்டு!!

0
20
The price of gold has fallen sharply.. This is the last!! The next bomb thrown by the experts!!
The price of gold has fallen sharply.. This is the last!! The next bomb thrown by the experts!!

Gold Silver Price: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பிற்கு பிறகு தங்கத்தின் விலையானது சற்று சரிவை சந்தித்துள்ளது. அதாவது 68,480 ஆக இருந்த விலை தற்பொழுது 66,280 ஆக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்த விலையை காட்டிலும் 15% உயர்ந்து தான் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல விலையானது குறையுமா அல்லது உயரக்கூடுமா என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் தற்பொழுது வரை தங்கத்தின் மீது முதலீடு செய்வது பாதுகாப்பானது என நம்புகின்றனர். தற்போது ட்ரம்ப்பின் வரி விதிப்பால் பணவீக்கமானது அதிகரிக்கக்கூடும். அச்சமயத்தில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது பணத்தை போடும் பட்சத்தில் மீண்டும் தங்கம் விலை பழைய நிலைக்கு செல்லக்கூடும். ஆனால் ட்ரம்ப் வரி விதிப்பிற்கு முன்பு அதிகரிக்கக்கூடும் என்ற பேச்சு அடிபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்குவது பொறுத்து அதன் விலையில் மாற்றம் ஏற்படும். இன்று தங்கத்தின் ஒரு கிராம் விலை 8,285 ஆகவும், ஒரு பவுன் 66 ஆயிரத்து 66,280 ஆகவும் உள்ளது. நேற்றைய விலையை காட்டிலும் 200 ரூபாய் குறைந்துள்ளது. இதுவே வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் எட்டு கிராம் ரூ 824 ரூபாய் என்று நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleடிஐஜி வழக்கு: சீமான் மீது பாய்ந்த பிடிவாரண்ட்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!
Next articleதளபதி பெரும் தலைவர்.. எல்லாமே எனக்கு சீமான் தான்- அண்ணாமலை பரபரப்பு பேச்சு!!