தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை உயரும்! இன்றைய தங்கத்தின் விலை!
அரசன் ஆனாலும் ஆண்டி ஆனாலும் நம்மிடம் கடுகளவு நிச்சயம் தங்க இருக்க வேண்டும். ஏனென்றால் தங்கமானது அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டுள்ளது. பொதுவாக தங்க விலை பொருத்தவரை ஒவ்வொரு நாளும் நேற்றைய நாளை விடை இன்றைய நாளில் தங்க விலை நிலவரம் மாறுபட்டு காணப்படும். உலகில் என்னதான் புதிய புதிய ஆவணங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகமும் மட்டுமே என்றும் நம்மிடம் இருந்து குறைவதில்லை.
நாட்டின் பொருளாதார பெரும்பங்கு வைக்கிறது இந்த தங்கம் தான். தங்கத்தை விரும்பாதவர் யாவரும் இல்லை. நாட்டின் பணவீக்கம் உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தங்கம் தான். மத்திய அரசு தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரை ஏழு புள்ளி அஞ்சு சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது நேற்று இந்த தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்தது, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4792க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38, 336 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 காசு குறைந்து, கிராம் ரூ.63.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.