கிடுகிடு வென்று குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தங்கத்தின் மிதமான இறக்குமதி வரியை மத்திய அரசு 15 சதவீதம் உயர்த்தியது. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. ஜூன் 30-ம் தேதி ஒரு பவுன் ரூ 37, 424க்கு விற்பனையானது. இம்மாதம் ஒன்றாம் தேதி திடீரென்று தங்கம் விலை 38 ஆயிரத்தை தாண்டியது.
ஒரு பவுனுக்கு ரூ 856 அதிகரித்து 38,280 க்கு விற்பனையானது. மேலும் இரண்டாம் தேதி ஒரு பவுன் விலை 38,336 ஆக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் தேதியும் அதே விலையை நீடித்து வந்தது. மேலும் 4 ஆம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ 38,384 க்கு விற்பனையானது.அதனை தொடர்ந்து 5 ஆம் தேதியும் அதிகரித்து 38,440 ரூபாயாக விற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிடுகிடுவென்று உயர்ந்த தங்க விலையானது நேற்று முதல் சரியத் தொடங்கியுள்ளது நேற்று ஒரு பவுனுக்கு ரூ 520 குறைந்த நிலையில். இன்று மீண்டும் ரூ 544 குறைந்துள்ளது. இந்த இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ 1064 குறைந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.