ஐந்தே நாட்களில் மீண்டும் உயர்ந்த பால் விலை! கால்நடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி!
மாநிலம் முழுவதும் பால் விற்பனை செய்து வரும் அரசு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஆவின் தான்.ஆவின் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனை செய்து வருகின்றது.இந்நிலையில் ஆவின் பாலிற்கும்,தனியார் பாலிற்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 20 ரூபாய் வரை வித்யாசம் உள்ளது.அதனால் தான் ஆவின் பாலை மக்கள் வாங்குகின்றனர்.குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நான்கு முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளனர்.பால் மற்றும் தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ 2 உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு கடந்த 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.இந்த பால் உயர்விற்கு காரணம் பால் கொள்முதல் விலை உயர்வு,மூலப்பொருட்களின் விலை உயர்வு தான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.இந்நிலையில் தற்போது பசும்பால் விலை மூன்று ரூபாய உயர்ந்து ரூ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.அதுபோலவே எருமைப்பால் விலை ரூ 5 உயர்ந்து ரூ 30 க்கு விற்பனை செய்யபடுகின்றது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக ஆடு,மாடு கால்நடைகளை வளர்க்கும் தொழில் முதன்மை பெற்றுள்ளது.ஆடு மற்றும் காளைகளை வளர்ப்பதைவிட கறவை மாடுகள் வளர்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது.பலரும் கறவை மாடு வைத்து பால் கறந்து அதனை விற்பனை செய்து அதன் மூலமாக வருவாய் ஈட்ட ஏதுவாக உள்ளது என கூறபடுகிறது.