விண்ணை முட்டும் வெங்காய விலை!! அதிர்ச்சியில்  சாமானிய மக்கள்!!

Photo of author

By Sakthi

ONION:வெங்காயத்தின் விலை கிலோ 120 ரூபாய் வரை விலை உயர்ந்து இருக்கிறது.

பொதுவாக மழை காலம் என்றால் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து இருக்கும். குறிப்பாக தக்காளி , வெங்காயத்தின் விலை -ஏற்றத்தை காணும். கடந்த வருடம் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 200 யை கடந்து இருப்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க முடியும்.  அந்த வகையில் இந்த ஆண்டும் வெங்காயம் விலை உயர்ந்து இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன் வெங்காயம்  2 கிலோ 50 ரூபாய்க்கு விற்றது. பிறகு சற்று உயர்ந்து 2 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளை விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தையில் காய்கறி வரத்து குறைந்து இருப்பது ஒரு காரணமாக இருக்கிறது. மேலும் வட மாநிலத்தில் தற்போது தான் காய்கறி அறுவடை முடிந்துள்ளது.  அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை  உச்சத்தை தொட்டுள்ளது. தினந்தோறும் 1300 டன்னாக இருந்தது  வரத்து  தற்போது  450  டன்னாக குறைந்துள்ளது.

மேலும் இந்தியா வெளிநாடுகளுக்கு காய்கறியை  ஏற்றுமதி செய்யும் தடையை நீக்கியுள்ளது.   இந்த நிலையில் தற்போது தக்காளியும் விலையேறத் தொடங்கி இருக்கிறது. இது போன்ற காய்கறி விலை ஏற்றங்கள்  சாமானிய   மக்களை பதிக்கு வகையில் இருக்கிறது.

இது போன்ற விலை ஏற்றங்களை குறைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.