இந்த பொருட்களின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

0
198
the-price-of-these-products-has-increased-dramatically-people-in-shock
the-price-of-these-products-has-increased-dramatically-people-in-shock

இந்த பொருட்களின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

கடந்த 3 ஆம் தேதி மத்திய நுகர்வோர் நலன் ,உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை  கட்டுப்படுத்தவும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு ஏற்பட கூடிய சிரமங்களை தவிர்க்கவும் மத்திய அரசானது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்தது.

மேலும் விலைவாசி உயர்வை தவிர்க்க மே 8,13ஆகிய தேதிகளில் அரசி மற்றும் ,கோதுமைக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.அதன் பிறகு அரசி மற்றும் கோதுமையின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகள் குறைந்தது.

இந்நிலையில் விருதுநகர் சந்தையில் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைப்பட்டியல் வாரம் ஒரு முறை வெளியிடப்படுவது வழக்கம்.இந்த வாரத்திற்கான விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட நல்லெண்ணெய் டின் 5610 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட நல்லெண்ணெய் டின் ரூ 5775 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பாமாயில் விலை கடந்த வாரம் 15 கிலோ கொண்ட பாமாயில் டின் ரூ 1530க்கு விற்கப்பட்டது.ஆனால் இந்த வாரம் அதே 15 கிலோ டின் ரூ1570க்கு விற்பனை ஆகின்றது.இந்த அதிரடி விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! பிள்ளைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும்?
Next articleஅரசின் PMSBY திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் ரூ. 2 லட்சம் கிடைக்கும் ! முழு விவரம் இதோ!