இந்த கட்டுமான பொருளின் விலை ரூ.140 ஆக உயர்வு! கேள்விக்குறியான கட்டுமானத்துறை? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

0
134
The price of this construction material has gone up to Rs. 140! Ramadas request to Tamil Nadu government!
The price of this construction material has gone up to Rs. 140! Ramadas request to Tamil Nadu government!

இந்த கட்டுமான பொருளின் விலை ரூ.140 ஆக உயர்வு! கேள்விக்குறியான கட்டுமானத்துறை? தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

தற்பொழுது தான் தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து காணப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது அன்றாட நடைமுறை வாழ்க்கையை நடத்த தொடங்கியுள்ளனர். கருணா காலகட்டத்தில் மக்கள் பலர் வேலையின்றி தவித்து வந்தனர். அரசாங்கம் பல உதவிகளை செய்தும் அது போதுமானதாக காணப்படவில்லை. தற்பொழுது அனைவரும் தங்களது அன்றாட வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது கட்டுமானப் பொருட்களின் முக்கிய ஒன்றான சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது. அதனால் பல கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவற்றால் கட்டிட பணியாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கட்டுமானப் பொருளின் விலை உயர்வால் பொருளாதார நிதி நெருக்கடிக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.சிமெண்டின் விலை உயர்வால் ஆங்காங்கே  கட்டிட பணிகள் நிறுத்தி வைத்திருப்பதினால் கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சராசரியாக தற்பொழுது மட்டும் சில்லரை விற்பனையில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ 480 ஆக உயர்ந்து காணப்பட்டது. 480 ஆக விலை உயர்ந்ததை கண்டு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு எதிர்ப்பவர்களுக்கு தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் பதிலளித்தது. அதில் அவர்கள் கூறியதாவது, சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

அதனால் சிமெண்டின் விலையும் அதிகரித்துள்ளது என்று கூறினர். அவ்வாறு  கூறிய நிலையில் தற்போது சிமெண்டின் விலை அதில் இருந்து ரூ 120 ஆக அதிகரித்துள்ளது. இதனைக்கண்ட பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். மேலும் இது குறித்து அவர் ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, மத்திய அரசின் அனுமதியுடன் சிமெண்ட்டை இறக்குமதி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களிடம் ஆலோசனை மேற்கொண்டு சிமெண்ட் விலையை குறைக்க அரசு வலியுறுத்த வேண்டும்.அதுமட்டுமின்றி தமிழகத்தில் சிமெண்ட் விலை ஒழுங்குபடுத்தி நிலையான விலையை நடைமுறைப்படுத்த தனியான ஆணையம் அமைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleமதுபான விளம்பரத்தில் பிரபல நடிகை.!! இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்.!!
Next articleசூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.!!