பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!

0
123

பெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!

 

இந்தியா நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கும் தாண்டி விற்கப்படும் நிலையில் தக்காளி விலை சில நகரங்களில் பெட்ரோல் டீசல் விலையை விட அதிகமாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 

இந்தியாவில் தக்காளி விலை ஏற்றத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். தமிழ்நாட்டில் தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இதை முதல்கட்டமாக சென்னையில் 82 ரேஷன் கடைகளில் தொடங்கி வைத்தது.

 

வெயிலின் தாக்கத்தினாலும், மழையின் தாக்கத்தினாலும் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை கடுமையாக ஏற்றம் கண்டு வருகின்றது.

 

தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்.வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 96.72 ரூபாயாக உள்ளது. மும்பையிலும் பெட்ரோல் விலையை விட 35 ரூபாய் வரை அதிகமாக தக்காளி விற்பனை செய்யப்படுகின்றது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 106.31 ரூபாய் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெட்ரோலை விட தக்காளியின் விலை அதிகமாக இருக்கும் சில நகரங்களின் பட்டியல்…

 

* சென்னையில் ஒரு கிலோ தக்காளி 117 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய் ஆகும்.

 

* டெல்லியில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.72 ரூபாய் ஆகும்.

 

* கொல்கத்தாவில் ஒரு கிலோ தக்காளி 148 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.03 ரூபாய் ஆகும்.

 

* மும்பையில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 106.31 ரூபாய் ஆகும்.

 

* மொராதாபாத்தில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 96.83.ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 

* சிலிகுரியில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 106.03 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 

Previous articleதிருப்பூரில் 6 வயது சிறுமி மீது காவல் வாகனம் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!
Next articleஅலுவலகத்தில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு!! பல  கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை!!