பணிகளை தொடங்கிய இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? பிரதமருக்கு சவால்விட்ட கட்சி!

Photo of author

By Sakthi

இலங்கையில் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் நிலவி வருகின்ற சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அங்கே பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் அந்த நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் யாவும் மிகப்பெரிய விலையேற்றத்தை சந்தித்திருக்கிறது.

இதற்கு நடுவே இப்போது மக்களின் போராட்டம் காரணமாக, இலங்கையின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ திடீரென்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

இந்தநிலையில், இலங்கையின் பல அரசியல்வாதிகள் பொது மக்களால் அடித்து விரட்டப்பட்டனர், ராஜபக்சேவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தந்தையை பணிகளை ஆரம்பித்துள்ளார். அவருடைய தலைமையிலான அமைச்சரவையில் இணைவதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இலங்கை நாட்டின் சுதந்திர வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மோசமான பொருளாதார நெருக்கடி தற்போது அந்த நாட்டை உலுக்கி வருகிறது. இதன் காரணமாக, ஆளும் ராஜபக்ச குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக இலங்கை நாட்டின் மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டத்தில் கடந்த 9ஆம் தேதி வன்முறை ஏற்பட்டதால் 9 பேர் பலியானார்கள், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பிரதமராக இருந்த ராஜபக்சே திடீரென்று பதவி விலகினார். இருந்தாலும் நாட்டில் அரசியல் குழப்பம் முழுமையாக நீங்கவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை மேற்கொண்டார். இதுகுறித்து எதிர்க்கட்சிகளுடன் அடுத்தடுத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

பேச்சுவார்த்தையின் முடிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் பதவியை ஒப்படைத்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. அவரும் நாட்டின் 26வது பிரதமராக நேற்றுமுன்தினம் மாலை பதவியேற்றுக் கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் ரணில் விக்கிரமசிங்கே 6வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

அதோடு அவர் நேற்று தன்னுடைய அலுவலகத்தில் தன்னுடைய பணிகளை தொடங்கினார். இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற போதும் கூட அரசுக்கு எதிரான போராட்டங்கள் முடிவுக்கு வரவில்லை.

தலைநகர் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு எதிராகவும் பொதுமக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதால் நாட்டில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆளும் இலங்கை மக்கள் கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதன்காரணமாக, அவர் மிகவும் எளிதாக மெஜாரிட்டி நிரூபிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் அவருடைய நியமனத்திற்கு எதிர்க்கட்சியான எஸ் ஜே பி கட்சி, ஜனதா விமுக்தி, பெரமுனா மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க மாட்டோம் என்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், எஸ் ஜே பி கட்சி தெரிவித்துள்ளது.

பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அரசு அமைப்பதற்கான ஆதரவு இல்லாததால் புதிய அரசில் அமைச்சர் பதவிகளை எஸ் ஜே பி கட்சியை சார்ந்த எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்திருக்கின்ற அந்த கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் அவருக்கு சவால் விடுத்திருக்கிறது.

ஆனாலும் கூட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மிக விரைவில் மீட்டெடுக்கும் விதத்தில் வகுக்கப்படும். பொருளாதாரக் கொள்கைகளுக்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்குவோம் என்றும் இந்த கட்சிகள் தெரிவித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.