நடிகர் சத்யராஜின் ஆரம்ப காலகட்ட திரைப்படங்களில் பெரும்பாலும் அவர் வில்லனாக நடித்ததாகவே இருக்கும். அதன்பின் தான் படிப்படியாக தன் நடிப்பின் திறமையின் மூலம் அவருக்கான சிறந்த கதாபாத்திரங்களை பெற்று இன்றுவரையில் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி பிறமொழி திரையுலகிலும் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சத்யராஜ் என்றாலே இரண்டு விஷயங்கள் பொதுவாக அனைவருக்கும் நினைவு வரக் கூடியவை. அவற்றில் ஒன்று இவர் பெரியார் கொள்கையை போற்றுபவர். மற்றொன்று எம்ஜிஆரின் மீதான அளவு கடந்த அன்பினால் அவருடைய கர்லா கட்டையை தன்னுடனே வைத்துக் கொண்டிருப்பது. எப்படி இருக்க கூடிய சத்யராஜ் அவர்கள் பேட்டி ஒன்று எம்ஜிஆர் குறித்த சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
வேதம் புதிது திரைப்படம் குறித்தும் அதனை திரையிட எம்ஜிஆர் உதவியது குறித்தும் அவர் பேசியிருப்பதாவது :-
1987 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் தான் வேதம் புதிது. இந்த திரைப்படத்தில் சென்சார் பிரச்சனைகள் இருந்ததால் இதனை திரையிடுவதில் பிரச்சனைகள் உருவாகின.
திரைப்படத்தை பார்த்த நடிகர் மற்றும் முன்னாள் முதல்வரான எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் நடிகர் சத்யராஜினுடைய கைகளைப் பிடித்து மூன்று முறை முத்தமிட்டு இருக்கிறார். இதை மனமகிழ்வோடு சத்யராஜ் அவர்கள் இப்பேட்டையில் பகிர்ந்துள்ளார். மேலும் எம்ஜிஆர் அவர்கள் பாரதிராஜாவிடம் உடனே திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிடுமாறு கூறியிருக்கிறார்.
அதற்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள், திரைப்படத்தில் சென்சார் பிரச்சினை உள்ளதால் இதனை திரையிட முடியாது என தெரிவிக்கவே, எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் தைரியமாக இந்த படத்தினை திரையிடுங்கள் என்று எம்ஜிஆர் அவர்கள் உறுதி கூறி இருக்கிறார்.
இதனை மிகவும் பெருமையுடனும் கர்வத்துடனும் நடிகர் சத்யராஜ் அவர்கள் “நான் ஆணையிட்டால் ரேஞ்ச்” தான் என்னுடைய தலைவன் என இந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார்.
குறிப்பாக, எம்ஜிஆர் அவர்கள் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு சரியாக 10 நாட்களுக்கு முன்னர் தான் இந்த திரைப்படத்தை வந்து கண்டுகளித்ததாக சத்யராஜ் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.