பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!!

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் வந்த சிக்கல்!! அரசு சந்திக்கும் பிரச்சனை!!

தமிழகத்தில் முதன் முதலில் மத்திய உணவு திட்டத்தை அறிமுக படுத்தியவர் காமராஜர்.அவர் அனைத்து ஏழை மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக மத்திய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன்பின்பு கர்நாடக மாநிலத்தில் அக்ஷர தசோஹா என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.இவ்வாறு மத்திய உணவு திட்டத்தை செயல்பட்டுத்த ஒன்று முதல் 5 ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு 1.93 கோடி மற்றும் 6 முதல் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடகாவில் உள்ள பெலாகவி மாநிலத்தில் மொத்தம் 1764 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது,அதில் வெறும் 169 சமையல் கூடங்கள் மட்டுமே உள்ளது அதன் மூலம் மத்திய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் சிகோடி என்னும் மாநிலத்தில் 2241 பள்ளிகள் செய்யல்பட்டு வருகின்றது. அதில் 306  சமையல் கூடங்கள் மட்டுமே உள்ளது அதன் மூலம் மத்திய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த இரு மாவட்டத்திலும் காய்கரி விலையில் மாற்றம் ஏற்படுவதால் இதற்கு இப்பொழுது கூடுதல் நிதி தேவைப்படுகின்றது.தற்பொழுது காய்கரிகளின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் மதிய உணவு திட்டத்தில் உணவை தயாரிப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகின்றது.

கர்நாடக அரசு , மத்திய அரசிடம்  இதனை தலையிட்டு  மாணவர்களுக்கு முறையாக ஊட்டச்சத்து நிறைந்த மத்திய உணவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது.