துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியலில் உச்சம் பெறுவதற்கு முன்பாக தமிழ் சினிமா துறையில் ஓகே ஓகே திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இவருடைய கடைசி திரைப்படம் மாமன்னன் என்பது பலருக்கும் தெரியும் ஆனால் திரைப்படத்திற்கு முன்பாக தற்பொழுது துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஏஞ்சல் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்த நிலையில் 80% நடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் அரசியலில் நுழைந்ததால் அந்த படத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை.
ஏஞ்சல் திரைப்படத்தின் உடைய தயாரிப்பாளர் இந்த திரைப்படத்தை நடித்து முடித்துக் கொடுக்கும்படி தெரிவித்திருக்கிறார். மேலும் 8 நாட்கள் மட்டுமே அவருக்கான கால்ஷீட் இருந்த நிலையில் இதை நடிக்க வில்லை என்றால் தனக்கு 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ஏஞ்சல் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் இருவரும் இணைந்து மேல்முறையீடு செய்திருக்கின்றனர். இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் இந்த வழக்குக்கான விசாரணை வருகிற மார்ச் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்றும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.