மருத்துவமனையின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மனநிலை மருத்துவர்;? இதன் பின்னணி?

Photo of author

By CineDesk

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 37 வயது நிறைந்த பத்திரிகை நிருபர் ஒருவர் 4வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில், மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 25 வயது நிறைந்த இளநிலை டாக்டர் ஒருவர் மனநல துறையில் பணியாற்றி வருகின்றார் அவர் இன்றுமாலை 5 மணியளவில் மருத்துவமனையின் தங்கும் விடுதியில் உள்ள 10வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

இந்நிலையில், குத்தித டாக்டரை கைப்பற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

விடுதி மேற்கூரையில் இருந்து
அவரது மொபைல் போனை காவல் அதிகாரிகள் எடுத்து ஆய்வு செய்ததில் அவருக்கு மனஅழுத்தம் இருந்துள்ளதாக முதற்கட்ட விசாரனையில் தெரிவித்துள்ளனர்.மேலும் இதுபற்றி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.கொரோனாத் தொற்று காரணத்தால் தனிமையில் இருப்பதால் மனநிலை மருத்துவருக்கு கூட மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யதுக்கொள்ளும்
அவலநிலை ஏற்பட்டுள்ளது