வழி தவறி ஊருக்குள் வந்த குட்டியானையை பாசத்துடன் தாய் யானையிடம் சேர்த்த பொதுமக்கள்!

Photo of author

By Sakthi

கேரள மாநிலம் நிலம்பூர் பகுதியில் வழி தவறி ஊருக்குள் வந்த யானை குட்டியை ஊர் மக்கள் உதவியுடன் தாய் யானையிடம் வனத்துறையினர் சேர்த்தனர். கேரளா மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் கருளாயி குடியிருப்பு பகுதிக்குள் வானத்திலிருந்து குட்டி யானை வழி தவறி வந்திருக்கிறது. இதனை ஊர் மக்கள் பாதுகாத்து வைத்திருந்தார்கள் என்றும், சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்த கருளாயி வனச்சரக அலுவலர் நச்சுமல் அமீன் உத்தரவின் அடிப்படையில் நெடுங்கயம் வன துறையினர் வந்து குட்டி யானையை மீட்டு வனத்தில் விடுவித்தபோது மறுபடியும் வன அலுவலகத்திற்கு குட்டி யானை வந்தது. அதன் பிறகு அதனை அலுவலக வளாகத்திற்கு கொண்டு சென்ற வனத்துறையினர் உணவளித்து பராமரித்து வந்தார்கள்.

தொடர்ந்து வனத்துறையினர் 2 பிரிவுகளாக பிரிந்து நடத்திய ஆய்வில் கருளாயி பகுதியிலிருக்கின்ற வன எல்லையில் காட்டு யானைக்கூட்டம் முகாமிட்டிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஊர்மக்கள் உதவியுடன் அந்த கூட்டத்திலிருந்த தாய் யானையுடன் குட்டி யானையை நீண்ட நேர முயற்சிக்கு பிறகு சேர்த்தனர் இதன் காரணமாக, கருளாயி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.