DMK: கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை காண சென்று உதயநிதியிடம் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
பெஞ்சால் புயல் ஆரம்பித்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் சம்பித்து போயின, மேற்கொண்டு இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் மீட்பு பணியினரால் சரி செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள குரு சிறு வியாபாரிகளுக்கு தமிழக அரசு தொழில் கடனும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
மேலும் பள்ளிக் கல்வித் துறை குறிப்பிட்ட இந்த மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் பொன்முடி கள ஆய்வு செய்த பொழுது அங்கிருந்த மக்கள் சேற்றை வாரி இறைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆளும் கட்சியின் ஆளுமை எந்நிலையில் உள்ளது என்பதை வெட்டம் வெளிச்சமானது. பாதிக்கப்பட்ட சூழலில் மக்களுக்கு உதவாத பொழுது இப்பொழுது மட்டும் எதற்கு உதவ வேண்டும் என கூறினர். இதேபோல புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர்கள், துணை முதல்வர் என பலரும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு சென்ற பொழுது அங்கிருந்த மக்கள் இதே போன்ற எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு உதயநிதி கிளம்ப நேரிட்டது. இவர் மீதும் சேறு வீசாமல் போனார்களே என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.