இரயிலில் பயணம் செய்த 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலர்… பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல்!!

Photo of author

By Sakthi

இரயிலில் பயணம் செய்த 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலர்… பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல்…

 

இயிலில் தன்னுடன் பயணம் செய்த சக பயணிகள் 4 பேரை சுட்டுக் கொன்ற இரயில்வே காவலரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ட்ரல் அதிவிரைவு வண்டி கடந்த ஜூலை 31ம் தேதி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இரயில்வே  பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர் சேத்தன்சிங் அவர்களும் அந்த இரயிலில் பயணம் செய்தார்.

 

அந்த இரயில்வே பயணத்தின் பொழுது தன்னுடன் பயணம் செய்த சக பயணிகள் 4 பேரை தான் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து இரயில்வே பாலுகாப்பு படை காவலர் சேத்தன் சிங் அவர்கள் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த நான்கு பேரும் அப்பொழுதே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

 

இதையடுத்து மற்ற காவலர்கள் இரயில்வே பாதுகாப்பு படை காவலர் சேத்தன் சிங் அவர்களை கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட இரயில்வே பாதுகாப்பு படை காவலர் சேத்தன் சிங் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பின்னர் சேத்தன் சிங் அவர்களுக்கு மனநல பரிசேதனையும் மேற்கொள்ளப்பட்டது.

 

இதையடுத்து இரயிலில் பயணித்த 4 பேரை சுட்டுக் கொன்ற  இரயில்வே பாதுகாப்பு படை காவலர் சேத்தன் சிங் அவர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆணையை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப் மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார்.