மீண்டும் மீண்டுமா! இந்த இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

0
300
#image_title

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

 

வெள்ளிக்கிழமை அறிக்கை படி, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, கிழக்கு திசை வேகக் காற்றின் காரணமாக டிசம்பர் 30 லிருந்து ஜனவரி 2 வரை ஒரு சில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதைப் போல் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

 

தென் தமிழகத்தில் ஜனவரி 3 மற்றும் நான்காம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வளைகுடா மற்றும் தென்கடலோர பகுதிகளில் டிசம்பர் 30ஆம் தேதி ஆன இன்று 55 கிலோ மீட்டர் அளவில் காற்று வேகமாக வீசப்படும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Previous articleOTT சீரிஸ்க்கு ஒரு எபிசோடிக்கு இவ்வளவு சம்பளமா கேட்கிறார்! ரொம்ப அதிகம்!
Next articleசொல்வதை செய்பவர் ரஜினி! முத்து படத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்!