இனி புதிய வடிவில் உருமாறும் ரேஷன் கார்டு!! அரசு அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

Ration Card: ரேஷன் அட்டை மூலம் மக்களுக்கு தேவையான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. அந்த ரேஷன் அட்டை முதலில் வேறு வடிவில் இருந்தது. தற்போது பழைய ரேஷன் கார்டு வடிவத்தை மாற்றி புதிய கார்டு வழங்க ஆந்திரப் பிரதேச மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அரசின் நலத்திட்டங்களை பெற ரேஷன் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய்,அரிசி போன்ற பொருட்கள் கிடைக்க வழிவகை செய்கிறது. அது மட்டும் அல்லாமல் பண்டிகை காலங்களில் கிடைக்கும் சிறப்பு தொகுப்புகள் போன்ற திட்டங்களுக்கு ரேஷன் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த நிலையில் இப்போது புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அவற்றை பரிசீலனை செய்து புதிய அட்டை வழங்க அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு மக்கள் தற்போது பயன்படுத்தும் ரேஷன் அட்டைகள் மாற்றி புதிய வடிவில் ரேஷன் கார்டு வழங்க அந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த புதிய வடிவில் உருவெடுக்கும் ரேஷன் கார்டு வருகின்ற ஜனவரி மாதம் மக்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் தற்போது உள்ள ரேஷன் கார்டுகள் மற்றப்படுகின்றன. அங்கு 90 லட்சம் ரேஷன் கார்டுகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு அரசின் ஒப்புதல்களுக்காக வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு ரேஷன் கார்டு மாதிரியை அனுப்பியுள்ளது.