ஐயர்களிலே நான் ரவுடி ஐயராகும் என சினிமா பட பாணயில் நிஜ ரவுடி ஐயர்!

Photo of author

By Rupa

ஐயர்களிலே நான் ரவுடி ஐயராகும் என சினிமா பட பாணயில் நிஜ ரவுடி ஐயர்!

Rupa

The real Rowdy Iyer in cinema style as I am Rowdy Iyer among the Iyers!

ஐயர்களிலே நான் ரவுடி ஐயராகும் என சினிமா பட பாணயில் நிஜ ரவுடி ஐயர்!

திருச்சி மாவட்டத்தில் தெப்பக்குளம் ஆண்டாள் தெரு பகுதியில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத நாகநாதர் கோவில் உள்ளது.இதில் தினம் தோறும் பூசைகள் செய்யும் ஐயர் அனைவரிடமும்  அவர் கடுமையாக நடுந்து கொள்வதால் அவர் மீது  நடவடிக்கை எடுக்குமாறு  மற்ற பூசாரிகள் சில தினங்கள் முன் சிவனடியார் கோவிலின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் உதவி ஆணையர் விஜயராணி சம்பத்தப்பட்ட அர்ச்சகரை டிஸ்மிஸ் செய்து புதிய அர்ச்சகரை  நியமித்தனர்.

இதையடுத்து புதிய அர்ச்சகர் இன்று காலை பூஜை  செய்வதற்காக திருக்கோவிலுக்கு வந்தார்.அப்போது பணியிலிருந்து நீக்கப்பட்ட ஐயர் கோவில் சாவியியை வைத்துக்கொண்டு புதிய அர்ச்சகரை கோவிலுக்கு வரவிடமால் தடுத்து நிறுத்தினார்.அதையடுத்து பணியிலிருந்து விலகிய ஐயர் புதிதாக வந்த அர்ச்சகரிடம் வாக்குவாதத்தில்  ஈடுப்பட்டார்.இதைதொடர்ந்து கோட்டை காவல் நிலையம் போலீசாருக்கு  தகவல் தெரிவிகப்பட்டது.காவல்துறை அதிகாரி விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய வந்த பக்கதர்கள் கருவறை பூட்டி இருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.கோவில் ஐயரே இவ்வாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்குள்ள மக்களிடம் பரப்பை ஏற்படுத்தியது.