நடிகர் கமலஹாசன் அவர்கள் உலக நாயகன் பட்டத்தை துறந்ததற்கான காரணம்!!

Photo of author

By Gayathri

இந்திய சினிமா துறையை பொறுத்தவரையில் உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் கமலஹாசன் ஒருவர் மட்டுமே. சினிமா துறையில் ஒவ்வொரு உச்ச நடிகர்களுக்கும் ஒவ்வொரு புனைப்பெயர்கள் வைத்து அழைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமீப காலத்தில் நடிகர் அஜித்குமார் அவர்கள் தன்னுடைய தல என்ற பட்டத்தை துறந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது கமலஹாசன் அவர்களும் தன்னுடைய உலக நாயகன் பட்டத்தை துறந்து இருப்பது ரசிகர்கள் மற்றும் சினிமா துறையில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது.

ஆகச்சிறந்த நடிகர்களான கமலஹாசன் மற்றும் அஜித் குமார் அவர்கள் தங்களுடைய பட்டங்களை வேண்டாம் என உதறித் தள்ளி இருப்பது பலரிடையே கேள்விகளை எழுப்பினாலும் பெரும்பான்மையினரிடையே வரவேற்கத்தக்க விஷயமாக உள்ளது. எனினும் 50 ஆண்டுகளாக தன்னுடைய பட்டத்தினை துறக்காத கமலஹாசன் அவர்கள் நடிகர் அஜித்குமாருக்கு பிறகு பட்டத்தை துறந்து இருப்பது அவரை கமலஹாசன் பின்பற்றுவது போன்று உள்ளது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இக்கால சினிமா துறையில் பல நட்சத்திரங்கள் தனக்கென தனிப்பட்டங்களை வைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு இருப்பது தவறு என்பதனை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதற்காகவே கமலஹாசன் தன்னுடைய பட்டத்தை வேண்டாம் என உதறி தள்ளியுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாகவே கமல் இதை பற்றி யோசித்துக் கொண்டுதான் இருந்தாராம். அவரின் பிறந்த நாள் போதே இதை அறிவிக்கலாம் என நினைத்தாராம். ஆனால் அவருடைய நலம் விரும்பிகள் சில பேர் பிறந்த நாளின் போது இப்படி ஒரு செய்தியை சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிறந்தநாள் முடிந்த பின்பு இச்செய்தியை வெளியிட்டு இருக்கிறார் கமலஹாசன் அவர்கள்.

இதற்கிடையில் அவரின் நடிப்பில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தில் கமலுக்கு அடைமொழியாக விண்வெளி நாயகன் என்று டைட்டிலில் போட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு ஒரு வேளை இனிமேல் விண்வெளி நாயகன் என ரசிகர்கள் அழைப்பார்கள் என்ற காரணத்தினால் கூட உலக நாயகன் பட்டத்தை துறந்தாரா கமல் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் தெரிவித்த பொழுது, ” யாருங்க சொன்னா இவரை உலக நாயகன் என்று, இவர் விண்வெளி நாயகன்” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.