விஜய் மற்றும் திரிஷா ஆகிய இருவருக்கும் இடையில் ஒரு உறவு இருப்பதாகவும் அதனால்தான் விஜயினுடைய மனைவி அவரை பிரிந்து சென்றதாகவும் பலரும் பேசி வரக்கூடிய நிலையில், இதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இவர்களுடைய போக்கானதும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா.
விஜய் மற்றும் திரிஷா குறித்து சேகுவேரா தெரிவித்திருப்பதாவது :-
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒன்றாகத்தான் சென்றார்கள். அது மட்டுமில்லாமல் பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்வதை பலரும் பல விதங்களில் பேச தொடங்கினர்.
அதன்பின் நடிகை திரிஷா அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் இவர்களுடைய சர்ச்சை பேச்சானது வெளிவராமல் இருந்தது. அதன் பின் மீண்டும் லியோ படத்தில் திரிஷா கமிட் ஆனதால் தொடர்ந்து சர்ச்சை பேச்சுக்கள் ஆரம்பம் ஆகின.
எனினும் இப்படத்தில் வரக்கூடிய முத்தக் காட்சி தேவையில்லாத ஒன்றுதான். அந்த முத்தக் காட்சி தான் அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவை இணக்கமாக மாற்றியது.
எந்த ஒரு மனைவிக்கும் தன்னுடைய கணவன் மற்றொரு பெண்ணோடு நெருங்கி நடிக்கிறார் அல்லது தவறாக தன்னுடைய கணவனை வேறு ஒரு பெண்ணுடன் சேர்த்து வைத்து பேசுகிறார் என்றால் வருத்தமாக தான் இருக்கும். விஜயினுடைய மனைவி விஜயை திருமணம் செய்து கொள்ளும்போதே அவர் ஒரு நடிகராக இருந்தவர். இத்தனை ஆண்டுகளில் திடீரென ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் இணைந்து நடிக்கிறார் என்றால் அதை எந்த ஒரு மனைவி ஆளும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரபல பத்திரிகையாளர் தெரிவித்திருக்கிறார்.
இவை மட்டுமல்லாது உதாரணத்திற்காக, விஜயகாந்த் ராதிகாவின் உடைய பிரச்சனையையும் தெரிவித்திருக்கிறார். அதாவது ராதிகா அவர்கள் விஜயகாந்தை மணமுடிக்கப் போவதாக தெரிவித்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயகாந்த் அவர்கள் எதுவும் பேசாமல் பிரேமலதா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
இங்கு விஜயினுடைய ஐம்பதாவது பிறந்தநாளுக்கு திரிஷா அவர்கள் I Love For Ever என்ற பதிவிடுகிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது சர்ச்சைகள் இன்னும் அதிகரிக்க செய்கின்றன. தன்னை ஒரு பெண்ணுடன் சேர்த்து வைத்து பேசப்படுகிறது என்றால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கடமை நடிகர் விஜய் அவர்களுக்கு உள்ளது. ஆனால் அதனை செய்யாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணத்திற்கு இருவரும் இணைந்து செல்வது என்பது இவர்களை அதை உறுதி செய்வதுபோன்றதாகும்.
திரிஷா விஜயுடன் மட்டுமில்லாமல் அஜித், ஜெயம் ரவி, சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் பொழுதில் எதற்காக இவரை விஜயுடன் மட்டும் சேர்த்து வைத்து பேச வேண்டும் ? அப்பொழுது ஏதேனும் ஒரு பிரச்சனை இருக்கிறது என்று தான் அர்த்தம் என தெரிவித்திருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா.