1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணி இன்று தொடங்கியது

Photo of author

By Pavithra

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நடுத்தர குடும்ப மக்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.அதிலும் குறிப்பாக மாற்று திறனாளிகள் உண்ண உணவு கூட இன்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதார சீர்கொலையாமல் இருக்க நிவாரண தொகையாக ரூ 1000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.இந்த திட்டத்தின் அடிப்படையில் அடையாறு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று தொடங்கிவைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

பின்னர் பிரகாஷ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமார் 60000 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
அதன்படையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் குடியேறியவர்கள் மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் தங்கியுள்ள நீல நிறதேசிய அடையாள அட்டை உள்ளமாற்றுத் திறனாளிகளுக்கும் இத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.என்று அவர் கூறினார்.
மேலும் இத்திட்டம் மாநகராட்சிவருவாய் துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.