பத்தாம் வகுப்பு “ரிசல்ட்” வெளியீடு குறித்து இன்று ஆலோசனை

0
79

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிக்கல்வி தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது ஆனால் பத்தாம் வகுப்பு மற்றும் +1 வகுப்பு மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டாலும் உயர்கல்வி மேற்கொள்ள மதிப்பெண் என்பது அடிப்படையாக உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு மற்றும் வருகை பதிவேட்டின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்வு மதிப்பெண்களை வழங்க தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் வந்தநிலையில் பத்து மற்றும் +1 வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் பற்றி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில், பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ், இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்கின்றனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடுபற்றிய ஆலோசனை நடத்த உள்ளனர் இது மட்டுமின்றிஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்தும்,ஆன்லைன் வகுப்பு தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக உள்ளது.இந்த ஆலோசனையின் அடிப்படையில் விரைவில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் ரிசல்ட் விரைவில் வரக்கூடும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் களால் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Pavithra