ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள்! இந்த விதிமுறையின் படிதான் ரயில்கள் இயக்க வேண்டும்!

0
200
The restrictions issued by the railway administration! Trains should run according to this rule!
The restrictions issued by the railway administration! Trains should run according to this rule!

ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள்! இந்த விதிமுறையின் படிதான் ரயில்கள் இயக்க வேண்டும்!

ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தற்போது குளிர் காலம் தொடங்கி உள்ளது அதனால் வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பனி அதிகளவு காணப்படுகின்றது.அதனால் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை வேளைகளில் இருக்கும் மூடுபனியில் ரயில் பயணத்தை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கும் ரயில் சேவையின் கால தாமதத்தை குறைக்கவும் இதன் மீது தனி கவனம் செலுத்தப்படுகின்றது.அதனால் ரயில்வே அமைச்சகம் கூறுகையில் பனி படர்வை நீக்கும் கருவிகள் ரயில் இஞ்சின்களில் பொருத்தப்படும்.மேலும் அதிக அளவு ஒலி எழுப்பும் கருவிகள் மற்றும் தண்டவாளங்களுக்கு அருகில் வெள்ளை நிற கோடுகள் போடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

லெவல் கிராசிங் பகுதிகளில் ஒலி எழுப்பக்கூடிய விசில் சத்தம் கொண்ட கருவிகள் மற்றும் எல்இடி பல்புகளை பொருத்துதல் மேலும் சிக்மா வடிவில் உள்ள சிக்னல் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தனர்.மேலும் ரயில்களை 60 கிலோ மீட்டரில் இருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.

Previous articleசென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்!
Next articleஉயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சபரிமலையில் இந்த தரிசனத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும்!