டம் டம் பாடலுக்கு நடனமாடிய காதல் ஜோடி! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

Photo of author

By Parthipan K

டம் டம் பாடலுக்கு நடனமாடிய காதல் ஜோடி! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

Parthipan K

The romantic couple who danced to Dum Dum song! The video is going viral on the Internet!

டம் டம் பாடலுக்கு நடனமாடிய காதல் ஜோடி! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் திருமணம் செய்வதும் அதனை அடுத்து ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று மறுமணம் செய்வதும் வழக்கமாகிவிட்டது. அவ்வாறு முதல் திருமணத்தில் விவாகரத்து பெற்ற பிரபலங்கள் இருவர் தற்போது காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பிரபலங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ். இருவரும் இணைந்து ஒன்றாக சுற்றுலா செல்வதும் புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் அதிதியின் பிறந்தநாளுக்கு சித்தார்த் க்யூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வாழ்த்தியிருந்தார்.

அதுமட்டுமின்றி திருமண விழாவிற்கு சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் இணைந்து சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தனர். இந்நிலையில் சித்தார்த்  மற்றும் அதிதி சூப்பர் ஹிட் பாடலான டம் டம் பாடலுக்கு நடனமாடி ரியல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் லைக்ஸ் போட்டு வருகின்றனர். அவர்களின் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.