இடி விழுந்து கூரை வீடு முழுவதும் எரிந்ததில் 1 லட்சம் ரொக்கம் 4 சவரன் நகை சேதம் 

இடி விழுந்து கூரை வீடு முழுவதும் எரிந்ததில் 1 லட்சம் ரொக்கம் 4 சவரன் நகை சேதம்

கள்ளக்குறிச்சி அருகே இடிவிழுந்து கூரை வீடு முழுவதும் எரிந்ததால் வீட்டில் இருந்து 1 லட்சம் ரொக்கம் 4 சவரன் நகை வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்ததால் சோகம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள திருக்குன்றம் கிராமத்தில் உள்ள விவசாயின மாதேஸ்வரன் என்பவரது கூரை வீடு நேற்று பெய்த மழையினால் இடி மின்னல் தாக்கி கூரை வீடு முழுவதும் எரிந்தது. உடனடியாக சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு போலீசார் தீயை அனைத்தனர்.

இருப்பினும் கூரை வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது இதில் வீட்டில் இருந்த 1லட்சம் ரொக்கம் மற்றும் 4 சவரன் நகை இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து எரிந்து சேதமடைந்தது. வீட்டை இழந்து வீட்டில் இருந்த நகை பணம் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்ததுள்ளதால் அரசு உதவ வேண்டும் என குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.