பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு! 

Photo of author

By Amutha

பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு! 

Amutha

பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு! 

ஈரோட்டில் நடைபெறும் தேர்தலுக்காக ஆளும் கட்சியை சேர்ந்த திமுக பணத்தை வாரி இறைக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு, வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் குறுக்கு வழியில் தேர்தலை சந்திக்கிறார்கள். பெண்களுக்கான உரிமை தொகை ரூ. ஆயிரத்தை இதுவரை இந்த விடியா அரசு வழங்கவில்லை.  ஆனால் தேர்தல் வருவதை ஒட்டி இன்னும் ஐந்து மாதத்தில் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை எவ்வாறு நம்புவது?

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போலீஸ், ராணுவத்தினர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வினர் இந்த தேர்தலுக்காக பணத்தை வாரி வாரி இரைக்கிறார்கள். மக்கள் மத்தியில் இரட்டை இலைக்கு பெரிய வரவேற்பு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க.வினர் சர்வதிகாரி போன்று அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 150 இடங்களில் பட்டியில் மாடுகளை அடைப்பது போல் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று குறுக்கு வழியில் பல கோடி ரூபாய்களை வாரி இரைத்துள்ளனர். 

நாங்கள் தேர்தலில் மக்களை நம்பி நிற்கின்றோம். பணத்தை நம்பி நிற்கவில்லை. மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. கள்ள ஓட்டு போட்டவரை பிடித்துக் கொடுத்ததற்காக எனக்கு கிடைத்த பரிசு சிறை தண்டனை. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.

ஓ.பன்னீர்செல்வம் களத்திலேயே இல்லை. அவர் பின்னால் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள். அதிமுகவிற்கு பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் இவர்களை தவிர வேறு யாரு வந்தாலும் அரவணைத்து ஏற்றுக் கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்.