கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு

0
230
Kumbakonam News in Tamil
Kumbakonam News in Tamil

கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு

கும்பகோணம் முழுவதும் காவி நிறத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டியில் தமிழ்நாடு, காங்கிரஸ் ஆல் இந்தியா புரபோஷனல் என்ற வட்ட வளவிலான சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், காவி நிறத்தில், சாமியார் உருவம் இருப்பது போலவும் அச்சிடபட்டுள்ளது. சாமியார் உருவத்தின் பின்புறத்தில் கதிர்கள் வீசுவது போலவும் உள்ளது. மேலும் அதில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதில்  ”காணவில்லை… டாலரை 40 ரூபாய்க்கு கொண்டு வருவாங்க என்று சொன்ன நபரைத் தேடுகிறோம்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்துக் அந்த பகுதியை சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: “பிரதமர் மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்துவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதனைச் சுட்டிக்காட்டும் வகையில் தான், இந்தச் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களை கவருவதற்காகவும், மோடியை பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

இது குறித்து தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டி.ஆர்.லோகநாதன் அவர்கள் கூறியதாவது, “இதுதொடர்பாக எனக்கு ஒன்றும் தெரியாது. யார் இந்த சுவரொட்டியை ஒட்டியது என போலீஸார்தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்

Previous articleநரம்பை மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய உணவுகள்!
Next articleஅரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!