நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா துறை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படம் அமரன் திரைப்படமாகும். இது தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகும்.
இந்த பயோபிக் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் எதார்த்தமான நடிப்பு மக்களை கவர்ந்து அதிக அளவு வசூல் சாதனையையும் இந்த படம் பெற்று இருக்கிறது.
குறிப்பாக இந்த படம் வெளியான பொழுது இதில் ஜாதியை குறிப்பிடவில்லை என்றும், அதற்கான காரணம் குறித்தும் பல்வேறு விதமான சர்ச்சைகள் ஏற்பட்டன. இதற்கான பதிலை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் பேட்டிய ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த படம் குறித்து எந்தவித சர்ச்சைகள் இருந்தாலும் மக்கள் இதனை மிகுந்த ஆர்வத்தோடு கண்டு களித்தனர். ஆனால் தற்பொழுது மேஜர் முகுந்த அவர்களின் தாயார் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
மேஜர் முகுந்தின் தாயார் கூறியதாவது :-
படத்தில் இருவரும் பார்த்தவுடன் காதலிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் என் மகனும் மருமகளும் முதலில் நல்ல நண்பர்களாகவே நட்பு பாராட்டி வந்தனர். அதுவே காலப்போக்கில் அவர்களுடைய காதலாக உருவெடுத்தது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, முதன் முதலில் ஹிந்து ரெபேக்கா வர்க்கிசை அறிமுகம் செய்யும்பொழுது மேஜர் முகுந்தவர்கள் ” ஜாதிகள் இல்லையடி பாப்பா ” என்று கூறிய பின்னரே அறிமுகம் செய்ததாகவும் அவருடைய தாயார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மேஜர் முகுந்த் அவர்கள் வீட்டிற்கு வரும் பொழுது பெற்றோரை ஆற தழுவி தன்னுடைய அன்பை பரிமாறுவார் என்றும் மனம் உருகி தெரிவித்துள்ளனர்.