நேற்றுவரை பயன்படுத்திய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது! கடலூரில் அதிர்ச்சி!
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனவே ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படவும் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது நவம்பர் மாதம் முதலிலிருந்தே வடகிழக்கு பருவமழை தொடர்ந்துள்ளதன் காரணமாக தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் கனமழை மக்களை வாட்டி எடுத்து வருகிறது. மேலும் பல பெரிய நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காணும் இடங்களில் எல்லாம் ஏரிகளும், ஆறுகளும், ஓடைகளும் நிரம்பி வழிகின்றன.
அதன் காரணமாக பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்கநிலை பள்ளி கட்டிடம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நேற்று வரை பயன்பாட்டில் இருந்த பள்ளி கட்டிடம் ஒன்று இன்று இடிந்து விழுந்தது. இது அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.