பாரதிராஜாவுக்கு ஆப்பு வைத்த இரண்டாம் குத்து இயக்குனர்! அடல்ஸ் வெயிட்டிங்!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களை எடுக்க முன்னணி இயக்குனர்களே தயங்கும் நிலையில் தைரியமாக இரண்டு படங்களை எடுத்து வெற்றி கண்டவர் தான் இயக்குனர் சந்தோஷ் P ஜெயக்குமார்.

மேலும் இவர் எடுத்த ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற இரண்டு படங்களுமே அடல்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தக் கண்டன்கள் பலரிடம் தவறான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸ்சை நிறைத்ததுதான் உண்மை.

இவ்வாறு இருக்க சந்தோஷ் பி ஜெயக்குமார் தானே கதாநாயகனாக அறிமுகமாகி ‘இரண்டாம் குத்து’ என்ற பெயரில் அடுத்தடுத்த அடல்ட் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார்.

அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் மற்றும் டீஸர் என அனைத்தும் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும் போஸ்டர்களில் கவர்ச்சி உச்சகட்ட நிலையில் இருந்தாலும் டீஸர் எந்த நிலையில் இருக்கிறது என்பதை சொல்லவே முடியாத நிலையில் உள்ளது.

அந்த மாதிரியான ஆபாசமான காட்சிகளில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சந்தோஷ். ஆனாலும் அவர் நினைத்த மாதிரியே அந்த டீஸர் தற்போது பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. 

மேலும் வெளியான 12 மணி நேரத்திலேயே 5 லட்சம் Views பெற்று டிரெண்டிங்கில் உள்ளது இரண்டாம் குத்து படத்தின் டீஸர்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க தயாரிப்பாளர் சங்கத் தலைவரான பாரதிராஜா இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும், பார்ப்பதற்கு கண் கூசுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு உடனடியாக பதில் அளித்த சந்தோஷ், ‘உங்க டிக் டிக் படத்தில் நடிகைகளை நீச்சலுடையில் பார்க்கும்போது உங்களுக்கு அப்படித் தோன்ற வில்லையா?’ என்று  ஒரே வரியில் பாரதிராஜாவை ஆப் செய்துவிட்டார். இந்த கேள்விக்கு இதுவரை இன்னும் பாரதிராஜா பதில் சொல்லவில்லை. ‘யாரோ எப்படியோ போங்கப்பா எங்களுக்கு எப்ப படத்தை விடுவியுங்கண்ணு மட்டும் சொல்லுங்க’ என அடல்ஸ் இந்த படத்திற்காக ஆவலுடன் வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர்.

https://twitter.com/santhoshpj21/status/1314068431537233920?s=20