ஆதித்யா அருணாச்சலம் கேரக்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஆர் முருகதாஸ் பேச்சு

Photo of author

By CineDesk

ஆதித்யா அருணாச்சலம் கேரக்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஆர் முருகதாஸ் பேச்சு

CineDesk

Updated on:

ஆதித்யா அருணாச்சலம் கேரக்டரில் ஒளிந்திருக்கும் ரகசியம்: ஆர் முருகதாஸ் பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’தர்பார்’ படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த கேரக்டரின் பெயரே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த கேரக்டருக்கு இந்த பெயரை ஏன் வைத்தேன் என்று தகவலை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் நேற்று இசை வெளியீட்டு விழாவின்போது கூறினார்

எந்த ஒரு ஆணிடமும் உங்களுக்குப் பிடித்த இரண்டு ஆண்கள் யார்? என்று கேட்டால் உடனே தந்தை, மகன் என்ற இரண்டு உறவுகளை கூறுவார்கள். ஏனெனில் தந்தை மீது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய மரியாதை இருக்கும், மகன் மீது மிக ஆழமான ஒரு அன்பு இருக்கும். அந்த வகையில் ஒரு மனிதனுக்கு தந்தை மற்றும் மகன் ஆகிய இரண்டு உறவுகள் மிகவும் முக்கியமானவை

அந்த வகையில் என்னுடைய தந்தை அருணாசலம் பெயரையும் என்னுடைய மகன் ஆதித்யா பெயரையும் இணைத்து தர்பார் படத்தில் ரஜினி அவர்களின் கேரக்டருக்கு ஆதித்யா அருணாச்சலம் என்று பெயர் வைத்தேன் என்று கூறினார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இந்த சுவாரஸ்யமான விளக்கம் அனைவரையும் கவர்ந்தது.