மனைவி உறவு கொள்ளாததால் கொலை செய்த கணவன் கூறிய பரபரப்பு வாக்குமூலம்!
உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் தாலுகா குமரகோடு அருகே உப்பின கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி விசாலா இவருக்கு 36 வயதாகிறது. இவர்கள் இரண்டு பேரும் துபாயில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த பிரச்சினையை சரிசெய்ய கடந்த 10ஆம் தேதி விசாலா துபாயிலிருந்து உடுப்பிக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் விசாலா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் விசாகாவின் செல்போன், மடிக்கணினி வயர்களினால் யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது.
இந்தக் கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்த்தன் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே விசாலா கொலையான தகவல் அறிந்து ராமகிருஷ்ணாவும் துபாயிலிருந்து பிரம்மாவர் வந்திருந்தார். சொத்து பிரச்சினையில் விசாலா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
மேலும் கொலை தொடர்பாக அவரை பிடித்து போலீசார் விசாரிக்கவும் செய்தனர். அப்போது அவர்தான் கூலிப்படை ஏவி கொன்றது அம்பலம் ஆனது. இதன் காரணமாக அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது கொலை செய்தது குறித்து ராமகிருஷ்ணா பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட போது துபாயில் வசித்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ராமகிருஷ்ணா விசாலாவை அடிக்கடி தாம்பத்தியத்திற்கு அளித்துள்ளார். ஆனால் அதற்கு விசாலா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக வெறுப்படைந்த அவரது கணவர் விசாலாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு ப்ரம்மாவர் வந்து, தனது மனைவியை கொலை செய்வது பற்றி நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின் உத்தரப் பிரதேசத்தில் வசித்து வரும் கூலிப்படையை சேர்ந்த சமிநிஷார்த் மற்றும் அவரது நண்பரிடம் விசாலாவை கொலை செய்ய ராமகிருஷ்ணா 2 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் உடுப்பியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மனைவியின் விவரங்கள் பற்றியும் கூறியுள்ளார். இந்த நிலையில் சொத்துப் பிரச்னையை சரி செய்ய துபாயிலிருந்து விசலாவையும் அனுப்பி வைத்தாராம்.
விசாலா உடுப்பிக்கு வந்தது பற்றி கூளிபடையினரிடமும் விவரங்களை தெரிவித்துள்ளார். அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள் புகுந்த கூலிப்படையை சேர்ந்த 2 பேர் விசாலாவை கழுத்தை இறுக்கி கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ராமகிருஷ்ணா கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படையை சேர்ந்த சமிநிஷார்த்தை பிரம்மாவர் போலீசார் கைது செய்தனர். அவரை நேற்று கொலை செய்த வீட்டிற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள இன்னொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்