Breaking News

அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்!

The shock of the buried person returning home! The son of the tear tribute poster!

அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்!

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா. இவருடைய மகன் வடிவேலு.சந்திரா அவருடைய மகனுடம் வசித்து வந்துள்ளார்.இவர் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் தாம்பரம் ,செங்கல்பட்டு இடையில் செல்லும் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தவர்கள் அந்த சடலத்தில் சந்திராவின் அங்க அடையாளங்கள் உள்ளது என கூறியுள்ளனர்.அதனால்   சந்திரா இறந்து விட்டார் என எண்ணி அவருடைய உறவினர்கள் மற்றும் அவருடைய மகன் ஆகியோர்ரிடம் அந்த மூதாட்டியின் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

.அதனையடுத்து சந்திராவின் மகன் வடிவேலு அவருடைய அம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஊரெங்கும் ஒட்டினார்.நேற்று முன்தினம் இறுதி மரியாதையுடன் மூதாட்டியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று சந்திரா உயிருடன் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.அவரை கண்ட உறவினர்,ஊர் பொதுமக்கள் மற்றும் குடுபத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.அடக்கம் செய்யப்பட உடல் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment