விரைவில் தளபதி68 படத்தின் ஷூட்ங்க் ஆரம்பம்… வெளியான தகவலால் ரசிகர்கள் ஹேப்பி!!

0
35

 

விரைவில் தளபதி68 படத்தின் ஷூட்ங்க் ஆரம்பம்… வெளியான தகவலால் ரசிகர்கள் ஹேப்பி…

 

நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள அவருடயை 68வது படமான தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு பற்றி அருமையான தகவல் கிடைத்துள்ளது.

 

வாரிசு படத்திற்கு பிறகு தற்பொழுது நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

 

அதற்கு காரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களும், அவருடயை எல்.சி.யூ(LCU) என்ற கான்செப்டும் தான். மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் லியே திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையால் நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 

யுவன் சங்கர் ராஜா அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஆனால் தற்பொழுது தளபதி68 திரைப்படத்திற்கு சி.எஸ்.கே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.

 

இந்நிலையில் தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்பொழுது ஓய்வு எடுப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.