விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வணங்கான் படப்பிடிப்பு… தீவிரம் காட்டும் இயக்குநர் பாலா…

Photo of author

By Sakthi

 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வணங்கான் படப்பிடிப்பு… தீவிரம் காட்டும் இயக்குநர் பாலா…

 

இயக்குநர் பாலா தற்பொழுது இயக்கி வரும் வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகர் சூரியா அவர்கள் அடுத்ததாக இயக்குநர் பாலா அவர்களின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். வணங்கான் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு(2022) கன்னியாகுமரியில் நடைபெற்றது.

 

இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக நடிகர் சூரியா அவர்கள் வணங்கான் திரைப்படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் நடிகர் அருண் விஜய் அவர்கள் வணங்கான் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்பொழுது வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வணங்கான் திரைப்படத்தை பற்றி சூப்பரான தகவல் கிடைத்துள்ளது.

 

அதாவது வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடியவுள்ளதாகவும் இயக்குநர் பாலா அவர்கள் வணங்கான் படப்பிடிபின் மீது தீவரம் காட்டி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. வணங்கான் திரைப்படத்தில் நடிகை ரோஷ்னா பிரகாஷ் அவர்களும் இயக்குநர் மிஷ்கின் அவர்களும் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.