‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என ஸ்டோரி போட்ட பாடகி! நடிகர் பிரேம்ஜியுடன் ரகசிய திருமணமா கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள்?
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரின் ஒருவராக இருப்பவர் பிரேம்ஜி.இவருடைய அண்ணன் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு.குறிப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு இயற்றிய அனைத்து படங்களிலும் பிரேம்ஜி காமெடி ரோலில் நடித்திருப்பார்.கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பிரின்ஸ்,மன்மத லீலை ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார்.ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெற வில்லை.
பிரேம்ஜி காமெடி நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் உள்ளார்.தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.மேலும் இவர் இறுதியாக இசைமையத்த திரைப்படம் மன்மத லீலை. இவருக்கு தற்போது 43 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும் நான் முரட்டு சிங்கிள் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.
இவரிடம் எப்போதும் யார் திருமணத்தை பற்றி கேட்டாலும் அதற்கான சரியான பதில் கூறாமல் அங்கிருந்து சென்றுவிடுவார்.இந்நிலையில் பாடகி வினைட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் நடிகர் பிரேம்ஜியை கட்டியணைத்தப்படி உள்ள வினைட்டா நான் மீண்டும் என் புருஷனுடன் சேர்ந்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த புகைப்படத்தின் பின்னால் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்ற பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார்.இந்த பதிவின் மூலம் பிரேம்ஜியும்,வினைதாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.