முன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

0
129
The situation of the former chief minister will be known on September 2! Postponement of judgment in Kodanadu case!
The situation of the former chief minister will be known on September 2! Postponement of judgment in Kodanadu case!

முன்னாள் முதல்வரின் நிலைமை செப்2 ம் தேதி தெரியும்! கொடநாடு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவர்களின் தோழி சசிகலாவும் ஆகியோருக்கு சொந்தமான இடம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. அது நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் அமைந்துள்ளது. அங்கு 24.04.2017 ஆம் ஆண்டு அங்கு  வேலையில் இருந்த ஓம்பகதூர் காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த பங்களாவில் இருந்த பல பொருட்கள் பல கொள்ளையடிக்கப்பட்டு, காணாமல் போனதாக தெரிவிக்கப் பட்டது.

எனவே இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர்அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் இந்த 10 பேரையும் கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவரை போலீசார் கைது செய்ய தேடி வந்தனர். ஆனால் அவரோ 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டார். அதோடு கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த கணினி ஆபரேட்டரான தினேஷ்ம் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

இந்த வழக்கும் கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. மேலும் இந்த வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் ஊட்டியில் இருந்து வந்து செல்கின்றனர்.இந்த வழக்கில், கடந்த 13ஆம் தேதி நடந்த விசாரணையில் வழக்கில் தொடர்புடையவர்கள் இடம் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்தார்.

மேலும் போலீஸ் தரப்பிலும் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோத்தகிரி போலீசார் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். இந்த நிலையில் ஊட்டியில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், கொடநாடு கொலை வழக்கில் முதல் குற்றவாளியான சயானிடம்  விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். மாலை 3 மணி முதல் 6 மணி வரை மூன்று மணி நேரம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில் அவர் ரகசிய வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். மேலும் அப்போது அவர் கூறிய தகவல் கொள்ளை போன சில முக்கிய ஆவணங்களை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்ததாகவும், கொலை வழக்கில் கூடலூர் அதிமுக பிரமுககர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. எனவே விசாரணையை மீண்டும் முதலிலிருந்து தொடங்க ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்து உள்ளனர்.

அதன் காரணமாக முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற விதத்திலும் இந்த வழக்கு விசாரணை சென்று கொண்டு உள்ளது. மேலும் சில ரகசிய தகவல்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மட்டும் மொத்தம் 103 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் தற்போது வரை 42 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் மேலும் 18 பேரிடம் விசாரணை நடத்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மூன்று பேரிடம் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தற்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரித்ததன் காரணமாக, மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் போலீஸ் சூப்பரடன்டு முரளி ராம்பா ஆகியோரிடமும் விசாரணை நடத்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி நீதிமன்றத்தில் கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முதல் குற்றவாளியான சயான் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு ஊட்டி நீதிமன்றத்திற்கு வந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கினை விசாரனையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Previous articleதமிழக முதல்வருக்கு இவ்வளவு பெருந்தன்மையா? மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு
Next articleவட்டியில்லாமல் ரூபாய் 2 லட்சம் வரை கடன்! வெளியானது அசத்தல் அறிவிப்பு